ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்துத் தொடரில் பார்சிலோனா அணி கெட்டாஃபே அணியை 2-0 என வீழ்த்தியது. இதன் மூலம் கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை வகித்துள்ளது.
கடந்த 2024-25 சீசனில் லா லிகாவில் கோப்பை வென்ற பார்சிலோனா இந்த 2025-26 சீசனிலும் தொடர்ச்சியாக கோப்பை வெல்லும் முனைப்பில் விளையாடி வருகிறது.
கெட்டாஃபே அணி தனது சொந்த மண்ணில் கொலிசியம் அல்போன்சோ பெரெஸ் கால்பந்துத் திடலில் பார்சிலோனா அணியுடன் மோதியது. இதில் 45+1ஆவது நிமிஷத்தில் ஃபெர்மின் லோபஸ் கோல் அடித்து அசத்தினார்.
முதல் பாதியில் 1-0 என பார்சிலோனா முன்னிலை வகித்தது. அடுத்து இரண்டாம் பாதியில் 74ஆவது நிமிஷத்தில் மார்கஸ் ராஷ்போர்டு கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற வைத்தார்.
இந்தப் போட்டியில் 76 சதவிகித பந்தை பார்சிலோனா அணி தனது கட்டுக்குள் வைத்திருந்தார்கள். இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட நான்கில் இரண்டு கோல்களாக மாறின. 33 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 11 புள்ளிகள் முன்னிலையில் பார்சிலோனா இருக்கின்றது.
லா லிகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 85 புள்ளிகள்
2. ரியல் மாட்ரிட் - 74 புள்ளிகள்
3. வில்லாரியல் - 62 புள்ளிகள்
4. அத்லெடிகோ மாட்ரிட் - 60 புள்ளிகள்
5. ரியல் பெட்டிஸ் - 50 புள்ளிகள்
6. கெட்டாஃபே - 44 புள்ளிகள்
Summary
Barcelona closed in on a second consecutive La Liga title
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருடப்பட்ட வெற்றி..! நடுவர்களை விமர்சித்த பார்சிலோனா வீரர்!

காலிறுதியில் பார்சிலோனா போராடி தோல்வி: அத்லெடிகோ அறையிறுதிக்கு முன்னேற்றம்!

பார்சிலோனா அபார வெற்றி: ஆட்ட நாயகன் விருது வென்ற லாமின் யமால்!

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


