2017-ஆம் ஆண்டு பயங்கரவாதத்துக்கான நிதி ஆதாரங்களை கண்டறிவதற்காக, காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவா்களான ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபாரூக், சையது அலி ஷா கிலானி உள்பட பலரை என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் பிரிவினைவாத தலைவா் யாசின் மாலிக்கை விசாரணை செய்வதற்காக ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மூலம் என்ஐஏ அமைப்பு அவரை காவலில் எடுத்தது.
இந்நிலையில், தில்லி நீதிமன்றத்தில் வைத்து யாசின் மாலிக்கை என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனா். பின்னர் சிறப்பு நீதிபதி ராகேஷ் சியால் முன்பு அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, யாசின் மாலிக்கை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு என்ஐஏ தரப்பில் கோரப்பட்டது.
எனவே, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி(ஜேகேஎல்எஃப்) கட்சியின் தலைவா் யாசின் மாலிக்கை, ஏப் 22-ஆம் தேதி வரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காவலில் வைக்க தில்லி நீதிமன்றறம் அனுமதியளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லாரி மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ரயில் முன் பாய்ந்து சலூன் கடைக்காரா் தற்கொலை

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


