டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மக்களவைத் தேர்தல்: முக்கிய தகவலுடன் டூடுல் வெளியிட்ட கூகுள்!

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வியாழக்கிழமை (ஏப்.11) தேர்தல் நடைபெறுகிறது.

News image
Updated On :11 ஏப்ரல் 2019, 5:50 am

DIN

ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வியாழக்கிழமை (ஏப்.11) தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம், சிக்கிம் மாநில சட்டப் பேரவைகளுக்கும், ஒடிஸா சட்டப் பேரவையிலுள்ள சில தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

ஆந்திரம் (25), அருணாசலப் பிரதேசம் (2), அஸ்ஸாம் (5), பிகார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு-காஷ்மீர் (2), மகாராஷ்டிரம் (7), மணிப்பூர் (1), மேகாலயம் (2), மிúஸாரம் (1), நாகாலாந்து (1), ஒடிஸா (4), சிக்கிம் (1), தெலங்கானா (17), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகண்ட் (5), மேற்குவங்கம் (2) ஆகிய 18 மாநிலங்கள், அந்தமான்-நிகோபார் தீவுகள் (1), லட்சத்தீவு (1) ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றிலுள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தலை சிறப்பிக்கும் விதமாக கூகுள் இயங்குதளம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. இந்த டூடுலின் மூலம் முதல் தலைமுறை வாக்காளர்கள் உட்பட வாக்குப்பதிவு குறித்த முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.