மேகாலயாவில் முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவம்

மேகாலயாவில் இன்று நடைபெற்று வரும் மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5
மேகாலயாவில் முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவம்

மேகாலயாவில் இன்று நடைபெற்று வரும் மக்களவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு பதக்கம் வழங்கி கொளரவித்துள்ளது தேர்தல் ஆணையம். 

17-வது மக்களவைக்கான 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல்கட்டமாக 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

இந்தநிலையில் மேகாலயா மாநிலம் மேற்கு காசி கில்ஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சரியாக 7 மணிக்கு சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு சிறப்பு மரியாதையும், பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளது தேர்தல் ஆணையம். 

வாக்காளர்கள் உற்சாகத்துடன் வந்து தங்களது கடமையை பதிவு செய்வதற்காக வாக்காளர்களை மலர் தூவியும், மேளதாளங்கள் முழங்கியும், பதக்கங்களையும் வழங்கி கெளரவித்தும் வாக்காளர்களை கவர்ந்து வருகிறது தேர்தல் ஆணையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com