புது தில்லி: முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் ஆகியோருக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கினை சி.பி.ஐ. கடந்த 2007 -ஆம் ஆண்டு பதிவு செய்தது.
இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், 2005-ஆம் ஆண்டு முதல்முறையாக இதுகுறித்து வழக்குத் தொடுத்தவருமான விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது .
இந்த மனுவானது கடந்த மாதம் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது இரண்டு வாரங்களுக்குள் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
அதன் தொடர்சியாக முலாயம் சிங் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பாத்திரம் ஒன்றை வியாழனன்று தாக்கல் செய்தார். அதில் சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்த வரை தான் ஒரு அப்பாவி என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெள்ளியன்று இந்த வழக்கானது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணை நிலவராம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்து நஷ்ட ஈடு வழங்காததால் தமிழக அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவு

புதிய சமையல் எரிவாயு சிலிண்டா் புதுச்சேரியில் அறிமுகம்

குழாய் தண்ணீரில் குளித்து காவிரி, கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

அதிமுகவில் புதிய பதவிகளை ஏற்கமாட்டோம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



