உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: இந்திய பார் கவுன்சில் கண்டனம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறப்பட்டிருப்பதற்கு இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.


புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கூறப்பட்டிருப்பதற்கு இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது, ஜோடிக்கப்பட்டது என்றும், இந்த செய்கைக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை அளித்து, இது மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நீதித் துறையையே தவறாக வழிநடத்த முயலும் செயலாகும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு ஆதரவாக ஒட்டுமொத்த பார் கவுன்சில் உறுப்பினர்களும் உறுதுணையாக நிற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய இளநிலை பெண் உதவியாளர், ரஞ்சன் கோகோய் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த புகார் குறித்து வேதனை தெரிவித்திருந்த ரஞ்சன் கோகோய், இந்த பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மறுப்பும் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...