தீயில் கருகிய கோதுமைப் பயிரைக் காப்பாற்ற குழாயில் தண்ணீர் அடித்த ஸ்மிருதி இரானி
உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் பற்றிய தீயில் 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த கோதுமைப் பயிர்கள் எரிந்து நாசமாயின.


அமேதி: உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் பற்றிய தீயில் 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த கோதுமைப் பயிர்கள் எரிந்து நாசமாயின.
இதன் பார்த்த 55 வயது விவசாயி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீ விபத்து நேரிட்ட போது, அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி, பிரசாரத்துக்காக சென்றிருந்தார். தீ விபத்து குறித்து அறிந்ததும், பிரசாரத்தை நிறுத்திவிட்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றார்.
அங்கு பயிர்கள் மீது தெளிக்க குழாயில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு குழாயில் தண்ணீர் அடித்துக் கொடுத்தார் ஸ்மிருதி இரானி. தான் ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து, அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக சேர்ந்து பணியாற்றிய ஸ்மிருதி இரானிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தேர்தல் நேரம் என்பதால், இந்த விடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...