புது தில்லி: காஷ்மீர் தொடர்பான இரு மசோதாக்களும் செவ்வாயன்று அமோக ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக மக்களவையில் அந்த மசோதாக்கள் செவ்வாயன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாக்கள் மீது எதிர்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்ற கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாக மாலையில் அமித் ஷா அவற்றுக்கு விரிவாக பதிலளித்துப் பேசினார். அதன் பின்னர் மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. உறுப்பினர்கள் இருக்கைகளிலுள்ள மைக்குகளுடன் இணைந்துள்ள பொத்தான்கள் வழியாக இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் கிடைத்தன. ஒரு உறுப்பினர் மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அதேபோல் காஷ்மீர் மறுசீரமைப்பிற்கான மசோதா மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 387 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன
இவ்வாறு பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கிய வாக்குறுதி ஒன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

மமதாவை வீழ்த்திய பவானிபூர் தக்க வைப்பு; நந்திகிராம் தொகுதி ராஜிநாமா! - முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு!

பொறுமையும் எளிமையும்... ஆட்ட நாயகன் விருது வென்ற ககிசோ ரபாடாவின் பேட்டி!

உதயநிதியின் கெத்து! விடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ்! | DMK
விடியோக்கள்

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

