லக்னௌ: தனக்கு 75 வயது ஆகி விட்டதால் உத்தரப்பிரதேச மாநில நிதி அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள சம்பவம் நிகழநதுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநித்தின் நிதியமைச்சராக இருப்பவர் ராஜேஷ் அகர்வால். இவர் சமீபத்தில் தனது 75-ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.
இந்நிலையில் ராஜேஷ் அகர்வால் செவ்வாயன்று தனது நிதி அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தனது ராஜிநாமா கடிதத்தை முதலவர் யோகிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
75 வயதைத் தாண்டியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில்லை என்ற பாஜகவின் முடிவுக்கு ஏற்பவவே அவர் ராஜிநாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தனது உடல்நிலையயும் அவர் ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 25 வருடங்களாக உ.பி மாநில சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் ராஜேஷ் அகர்வால், கடந்த 2003- 2007 காலகட்டத்தில் துணை சபாநாகராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


