புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரத்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் பல முக்கிய வாதங்களை முன் வைத்தனர்.
அதாவது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் குற்றப்பத்திரிகையில் ப. சிதம்பரத்தின் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான விசாரணையில் சிதம்பரம் போதிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. வழக்கு தொடர்பான பல முக்கிய ஆதாரங்கள் அவர் வசம் உள்ளது. மௌனமாக இருப்பது அடிப்படை உரிமையாக இருக்கலாம் ஆனால், இவர் விசாரணையின் போது வாய்திறக்காமல் இருக்கிறார்.
ப. சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்ய உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நடந்த சதியை வெளிக் கொண்டு வருவதற்கு சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும் சிதம்பரத்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தனது வாதத்தை முன் வைத்தது.
இதையடுத்து சிதம்பரம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


