தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கர்நாடக பாஜக புதிய தலைவராக நலின் குமார் கதீல் பதவியேற்பு

கர்நாடக மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக நலின் குமார் கதீல் செவ்வாய்கிழமை பதவியேற்றார். 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2019, 7:38 am

கர்நாடக மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக நலின் குமார் கதீல் செவ்வாய்கிழமை பதவியேற்றார். பி.எஸ்.எடியூரப்பா முன்னிலையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. இதுகுறித்து கதீல் கூறுகையில்,

பாஜக-வில் மட்டும் தான் சாதாரண தொண்டரால் கூட கட்சித் தலைவர் பதவி வரை வளர முடியும். எனது வெற்றியை நான் ஆர்எஸ்எஸ்-க்கு சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் நான் ஆர்எஸ்எஸ்-ஆல் தான் நிறைய கற்றுக்கொண்டேன். 

பாஜக-வுக்கு தற்போது பொற்காலம், எனவே கட்சியை மேலும் பலப்படுத்த இதுவே சரியான தருணமாகும். கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களின் உதவியுடன் இதை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து முன்னாள் பாஜக தலைவர் எடியூரப்பா கூறியதாவது, நலின் குமார் கதீல் சிறந்த உழைப்பாளி. 3-ஆவது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த பாஜக-வும் அவருக்கு எப்போதும் துணை நிற்கும். கதீல் தலைமையில் சந்திக்கவுள்ள அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் 150 தொகுதிகளை கைப்பற்றும் என்றார்.

மேலும், கர்நாடக அமைச்சரவையில் எவ்வித அதிருப்தியும் இல்லை, இங்கு கருத்து வேறுபாடுக்கு துளியும் இடமில்லை என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.