லக்னௌ: உத்தரப்பிரதேச மாநில பள்ளி ஒன்றில் தலித் மாணவர்களுக்கு மட்டும் தனி வரிசையில் உணவு பரிமாறப்பட்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் ராம்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்கப் பள்ளியில்தான் மாணவர்கள் சாதிப் பிரிவினைக்கு ஆளாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு மதிய உணவின்போது தலித் மாணவர்கள் மட்டும் தனியாக அமர வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.]
அத்துடன் பள்ளியில் தலித் மாணவர்கள் உணவு உண்பதற்காக தங்களது தட்டுகளை வீட்டிலிருந்து கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், பின்னர் தனியாக அமர வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகளும் கல்வித்துறை ஒப்புக்கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட தொடக்கப் பள்ளி முதல்வர் பி. குப்தா பேசுகையில், உயரதிகாரிகள் ஆய்வுக்கு வந்திருந்தபோது சாதி அடிப்படையில் வேறுபாடு காட்ட வேண்டாம் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதன்பிறகும் இங்கு இந்த நடைமுறை தொடர்கிறது" எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தலித் மாணவர்களுக்கு மட்டும் தனி வரிசையில் உணவு பரிமாறப்பட்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பல்லியாவில் அரசுப் பள்ளியில் தலித் மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து உணவு உண்ணும் செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய இழிவான இனவெறி பாகுபாடு காட்டுபவர்கள் மீது அரசு உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாகுபாடு காட்டும் பள்ளி அதிகாரிகள் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கை, மற்றவர்கள் பாடம் கற்கும் விதமாக அமைய வேண்டும். இனி இதுபோன்ற தவறை யாரும் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

சிதம்பரத்தில் இன்று அம்பேத்கா் மாளிகை அமைக்க அடிக்கல்

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


