டெல்லியில் கணவருடன் ஏற்பட்ட விரோதம் காரணமாக, கர்ப்பிணிப் பெண் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ரோஹிணி செக்டார் -2 என்ற பகுதியைச் சேர்ந்த சங்கீதா(23) என்பவர் ஐந்து மாத கர்ப்பிணி. இவரது கணவர் கோவிந்த், அங்குள்ள தனியார் நிறுவன ஊழியர். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது, பெண்ணின் வீட்டார் வரதட்சணையாக பேசிய தொகையை கொடுக்கவில்லை என்பதால், கோவிந்த் அடிக்கடி மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். கர்ப்பிணி என்றும் பாராமல் நேற்று அவரிடம், கணவர் கோவிந்த் சண்டையிட்டுள்ளார். இதனால், மனமுடைந்த சங்கீதா, அவர் வசிக்கும் கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி கூறும்போது, 'தற்கொலை செய்துகொண்ட சங்கீதா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்னதாக, அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது கணவர் கோவிந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம்' என்று தெரிவித்தார்.
கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை
என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


