தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொலை செய்யப்படுவதற்கு முன் பெண் மருத்துவர் தொலைபேசியில் பேசிய அந்த 6 நிமிடங்கள்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2019, 12:16 pm

DIN

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

ப்ரியங்கா கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, அவர் தனது சகோதரியுடன் 6 நிமிடங்கள் 45 வினாடிகள் பேசியுள்ளார். தனக்கு உதவி செய்ய வந்த தற்போதையை குற்றவாளிகளை பார்த்து பயப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

முதலில் தனது சகோதரியை போனில் அழைத்து பைக் பழுதடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். அப்போது பைக்கை நிறுத்திவிட்டு சுங்கச்சாவடியில் காத்திருக்குமாறு சகோதரி பவ்யா அறிவுறுத்தியுள்ளார். ஆனால், சுங்கச்சாவடியில் நிற்பது மோசமாக இருக்கும் என்று பிரியங்கா மறுத்துவிட்டார்.

பின்னர், 'நான் எனது பைக்கை ஸ்டார்ட் செய்தேன், ஆனால் பின்னால் இருந்து சிலர் கத்த ஆரம்பித்தார்கள். உங்களது பைக் டயர் பழுதடைந்துள்ளது. நீங்கள் மேலே செல்ல முடியாது என்று கூறினர். பேருந்து நிலையத்தில் வைத்து அதை சரிசெய்ய முடியும் என்று நான் நினைத்தாலும், அவர்கள் என்னை மேலே செல்ல அனுமதிக்கவில்லை. என்னை கீழே இறக்கி, ஒருவன் எனது பைக்கை எடுத்துச் சென்றான். ஆனால், எல்லாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதாக கூறி அவன் சற்று நேரத்தில் திரும்பி வந்தான்' என்று ப்ரியங்கா பேசியுள்ளார்.  

பிரியங்கா கடைசியாக இரவு 9.22 மணிக்கு தன்னிடம் பேசியதாகவும், இரவு 9.44 மணியளவில் அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாகவும் பவ்யா கூறியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர், பவ்யா மற்றும் அவரது பெற்றோர் டோல் பிளாசாவுக்கு விரைந்தனர். அங்கு அவரைத் தேடிய போது காணவில்லை. இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.