நாளை தொடங்குகிறது மே.இ. தீவுகள் தொடர்: தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பந்த்!
மேற்கிந்தியத் தீவுகளுடனான டி20 தொடரில் மகேந்திர சிங் தோனியின் விக்கெட் கீப்பிங் சாதனை ஒன்றை ரிஷப் பந்த் முறியடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.


மேற்கிந்தியத் தீவுகளுடனான டி20 தொடரில் மகேந்திர சிங் தோனியின் விக்கெட் கீப்பிங் சாதனை ஒன்றை ரிஷப் பந்த் முறியடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரிலும் மகேந்திர சிங் தோனி சேர்க்கப்படாததால் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்படவுள்ளார்.
இதன்மூலம், இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டி20 ஆட்டங்களில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை முறியடிக்க ரிஷப் பந்த்-க்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட்:
| வீரர் | விக்கெட் வீழ்ச்சி |
| மகேந்திர சிங் தோனி | 5 |
| தினேஷ் ராம்தின் | 5 |
| ஆண்ட்ரி ஃபிளெட்சர் | 4 |
| தினேஷ் கார்த்திக் | 3 |
| ரிஷப் பந்த் | 3 |
மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடரின் 3 ஆட்டங்களிலும் ரிஷப் பந்த் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதால், தோனியின் இந்த சாதனையையும் 3 ஆட்டங்களில் முறியடிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...