'குடியுரிமை மசோதாவை எதிர்த்தால் தேசத்துரோகிகள் என்று கூறுவதா?' - உத்தவ் தாக்கரே கேள்வி
உரிய திருத்தங்கள் செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


உரிய திருத்தங்கள் செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்களவையில் 12 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினா்களும், எதிராக 80 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.
ஆனால், இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மசோதா குறித்து பேசிய மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசும்போது, 'குடியுரிமை மசோதாவை எதிர்த்தால் அவர்களை 'தேசத்துரோகிகள்' என்று கூறுவதா? மசோதா மீது குடிமகன் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதைத் தீர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பின்னரே மசோதாவுக்கு சிவசேனை ஆதரவளிக்கும்.
நாட்டை தாங்கள் மட்டுமே காப்பாற்றுவதாக பாஜக நினைத்துக் கொண்டிருப்பது மாயை. சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு உரிய திருத்தங்கள் செய்யப்படாத வரை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம்' என்றுதெரிவித்துள்ளார்.
முன்னதாக, மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக சிவசேனை எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்ததற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...