திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

அலிகார் பல்கலை. மாணவர்களிடையே மதவெறியை தூண்டியதாக கோரக்பூர் மருத்துவர் மீது வழக்குப்பதிவு!

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதற்காக கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜனவரி 2024, 1:35 pm

DIN

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியதற்காக கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த 2017ம் ஆண்டு ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தின்போது பேசப்பட்டவர் மருத்துவர் கஃபீல் கான். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மதவெறியை தூண்டும் வகையில் உரையாற்றியதற்காக அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

டிசம்பர் 13ம் தேதி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 153ஏ-இன்(மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) கீழ் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அலிகார் எஸ்.பி. அபிஷேக் தெரிவித்தார். 

Story image

கஃபீல் கான் தனது பல்கலைக்கழக உரையில், 'இங்கு அனைவரும் இந்து மற்றும் முஸ்லீம்களாக இருக்கவே ஊக்குவிக்கப்படுகிறார்கள். மனிதத்தன்மையுடன் இருக்க யாரும் கற்றுக்கொடுப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ் பதவிக்கு வந்ததில் இருந்தே அரசியலமைப்பு மீதான நம்பிக்கை போய்விட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முஸ்லீம்களை இரண்டாம் நிலை குடிமகன் என்ற நிலைக்குத் தள்ளுகிறது. என்.ஆர்.சியை அமல்படுத்துவதன் மூலமாக மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். 

தாடி வைத்திருப்பவர்கள் பயங்கரவாதிகள் என்று ஆர்.எஸ்.எஸ் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்தியா முஸ்லீம்களுக்கான நாடு அல்ல என்பதை தற்போதைய அரசு பல்வேறு சட்டங்களின் மூலமாக நிரூபித்து வருகிறது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும்' என்று பேசியதாக எப்.ஐ.ஆர்-இல் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

மேலும், அலிகார் பல்கலைக்கழகத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கு வகையில், இந்துத்துவ எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.