ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்; இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய நிலைகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:35 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய நிலைகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. 

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இன்று பூஞ்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய நிலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று காலை 7.15 மணியளவில் இருந்து தாக்குதல் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறிய ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகளை வீசி பாகிஸ்தான் துருப்புக்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.