மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

எந்த வங்கியாக இருந்தாலும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருந்தால் போதும், ஆர்பிஐ அறிவித்திருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

News image

22_tni_bank_2210chn_65_2

Updated On :19 டிசம்பர் 2019, 9:34 am


எந்த வங்கியாக இருந்தாலும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளராக இருந்தால் போதும், ஆர்பிஐ அறிவித்திருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

அதாவது, 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் என்இஎஃப்டி மூலம் கட்டணமின்றி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆர்பிஐ வழிவகை செய்துள்ளது.

சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கு என்இஎஃப்டி மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படும் அனைத்து விதமான கட்டணங்களையும் ரத்து செய்யுமாறு ஆர்பிஐ, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இணையதளம் அல்லது செல்போன் செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்யுமாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம்,என்இஎஃப்டி மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய இதுவரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயலும் வகையில் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 16ம் தேதி முதல் என்இஎஃப்டி மூலம் 24 மணி நேரமும் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.