தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்: இளைஞரின் 'ஏடாகூட' கேள்விக்கு பெங்களூரு போலீசின் 'பொறுப்பான' பதில்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் இளைஞரின் 'ஏடாகூட' கேள்விக்கு, ட்விட்டரில் பெங்களூரு போலீஸார் அளித்துள்ள பதில் விவாதத்தைக்ரு உருவாக்கியுள்ளது.

News image
ட்விட்டரில் இளைஞர் கேள்வி
Updated On :19 டிசம்பர் 2019, 1:57 pm

IANS

பெங்களூரு: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் இளைஞரின் 'ஏடாகூட' கேள்விக்கு, ட்விட்டரில் பெங்களூரு போலீஸார் அளித்துள்ள பதில் விவாதத்தைக்ரு உருவாக்கியுள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறை சம்பவங்களும்  நடைபெறுகின்றன. அதனைத் தடுக்க பல்வேறு இடங்களிலும் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் இளைஞரின் 'ஏடாகூட' கேள்விக்கு, ட்விட்டரில் பெங்களூரு போலீஸார் அளித்துள்ள பதில் விவாதத்தைக்ரு உருவாக்கியுள்ளது.

இதுதொடர்பாக பெங்களூரு போலீசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், 'நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.கல்வி நிலையங்கள், வங்கிகள் மற்றும் சந்தைகள் செயல்படும். எல்லாவிதமான போக்குவரத்து சாதனங்களும் நாளை இயங்கும். அச்சப்படத் தேவையில்லை' என்று பதிவிடப்பட்டிருந்தது.

இந்த டிவீட்டுக்கு பதிலாக இளைஞர் ஒருவர், 'நாளை மதுக் கடைகள் செயல்படுமா?  மது கிடைக்குமா?' என்னும் பொருளில் கேள்வி எழுப்பியிருந்தார்.    அவரது அச்சத்தைப் போக்கும் விதமாக 'நாளை எல்லாம் இயல்பாக நடக்கும் என்று போலீஸார் பொறுப்பாக பதிலளித்தது.

இளைஞரின் அந்தக் கேள்விக்கும் போலீஸின் பதிலுக்கும் ட்விட்டர் பயனாளர்கள் கலவையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.