வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தில்லியில் கடும் பனிமூட்டம்: 17 ரயில்கள் தாமதம்

தில்லி மற்றும் அருகில் உள்ள பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக 17

News image
Updated On :21 டிசம்பர் 2019, 11:44 am

PTI

புது தில்லி: தில்லியில் கடும் பனிமூட்டம் நிலவிவருவதால் 17 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகின்றது. சாலைகளில்முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

அந்தவகையில், ரயில் சேவையும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லிக்கு வரவேண்டிய 17 ரயில்கள் சுமார் 4 மணி நேரத்திற்குப் பின்னர் இயக்கப்பட்டது. 

அதன்படி, ரயில் 12801 (பூரியிலிருந்து புது தில்லி வரை) மூன்று மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. அதே நேரத்தில் 12397 (கயாவிலிருந்து புது தில்லி வரை) மூன்று மணி மற்றும் நாற்பது நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. 

சென்னை-புது தில்லி எக்ஸ்பிரஸ் (12615) இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதேபோல், 12303 (ஹவுரா முதல் புது தில்லி வரை), 12721 (ஹைதராபாத் மற்றும் புது தில்லி இடையே) மற்றும் 14017 (ராக்ஸால் முதல் ஆனந்த் விஹார் வரை) உள்ளிட்ட 17 ரயில்களும் பனிமூட்டம் காரணமாகத் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.