சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சுயேச்சை வேட்பாளரிடம் 4 ஆயிரம் வாக்குகள் பின்தங்கிய ஜார்க்கண்ட் முதல்வர்

ஜெம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் அம்மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ரகுபர் தாஸ் போட்டியிட்டுள்ளார்.

News image
Updated On :23 டிசம்பர் 2019, 10:10 am

DIN

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு, நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. 

இதில் ஜெம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் அம்மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ரகுபர் தாஸ் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பாஜக அமைச்சரும், சுயேச்சை வேட்பாளருமான சரயு ராயை விட 4,643 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார் ரகுபர் தாஸ். இத்தொகுதியில் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் ரகுபர் தாஸ் தொடர்ந்து வெற்றிபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முன்னிலை நிலவரங்கள் மட்டுமே வந்துள்ளன. எனவே இதனை இறுதி முடிவாக ஏற்க முடியாது. வெற்றி நிலவரத்தை இப்போதே கணிப்பது சரியாக இருக்காது. இந்தப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைப்பது உறுதி என்று ரகுபர் தாஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.