மும்பை: மணமகன் யாரென்று தெரியாத திருமணம் என்று பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி குறித்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வரான சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜகவின் அகில இந்திய துணை தலைவரான சிவராஜ் சிங் சவுகான் அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
எந்தவொரு கொள்கையோ, நோக்கமோ அல்லது அல்லது தலைவர் கூட இல்லாதது எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி. பிரதமர் வேட்பாளர் ஒருவர் இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி என்பது, மணமகன் யாரென ஒருவருக்கும் தெரியாத திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்வது போலாவாகும்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் அவர்களது கைகளே ஒன்று சேர்ந்துள்ளன. இதயங்கள் அல்ல; கருத்தியல் அடிப்படையில் அல்ல; எதிர்க்கட்சி தலைவர்களின் விருப்பத்திற்கு இணங்கவே இந்த கூட்டணி உருவாகியுள்ளது.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300 தொகுதிகளை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


