எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

முதலீட்டாளர்களைக் காக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Updated On :14 பிப்ரவரி 2019, 1:14 am IST


முதலீட்டாளர்களைக் காக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, தவறான நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய வைக்கும் மோசடியாளர்களிடமிருந்து முதலீட்டாளர்களைக் காக்கும் நோக்கில் முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. நிதியமைச்சக நிலைக் குழு அளித்த பரிந்துரைகளின்படி இந்த மசோதா உருவாக்கப்பட்டது.
இந்த மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய நிதியமைச்சர் பியூஷ் கோயல், முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்கள் தொடர்பாக இதுவரை 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக மேற்கு வங்கத்தில் மட்டும் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
இத்தகைய குற்றத்தைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு விரைந்து செயல்பட்டு இந்த மசோதாவைக் கொண்டுவந்தது. இந்த மசோதா மிகவும் கவனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதக் குறைபாடுகளும் இல்லை என்றார்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. முறைப்படுத்தப்படாத டெபாசிட் திட்டங்களால் சிறு முதலீட்டாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: விவாகரத்து கோருவதற்கான காரணங்களில், தொழுநோயை நீக்குவதற்கு வகைசெய்யும் தனிநபர் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் மீது எந்தவித விவாதமும் நடைபெறவில்லை. இந்த மசோதா மக்களவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. 
ஹிந்து திருமணச் சட்டம், முஸ்லிம் திருமண முறிவு சட்டம், கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்து சட்டம், சிறப்பு திருமணச் சட்டம் உள்ளிட்ட தனிநபர் சட்டங்களில் திருத்தம் செய்ய இந்த மசோதா வழிவகுக்கும். 
நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த மசோதா நுகர்வோரின் உரிமைகளை மேலும் பாதுகாக்கும் வகையிலும், நுகர்வோரின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா கடந்த டிசம்பர் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் மாநிலங்களவையில் புதன்கிழமை கூறுகையில், இந்தச் சட்டத் திருத்த மசோதா மாநில நுகர்வோர் மன்றங்களுக்கான அதிகாரங்களைக் குறைத்து மத்திய நுகர்வோர் மன்றங்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கும் வகையில் உள்ளது என்றார். இடதுசாரி கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.