நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

ரஃபேல் விவகாரம்: சிஏஜி அறிக்கை முற்றிலும் பொய்யானது: காங்கிரஸ் விமர்சனம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தாக்கல் செய்த அறிக்கை முற்றிலும் பொய்யானது என்றும், வெறும் கண்துடைப்பு என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2019, 1:19 am IST


ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தாக்கல் செய்த அறிக்கை முற்றிலும் பொய்யானது என்றும், வெறும் கண்துடைப்பு என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மேற்கொண்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மேற்கொண்ட ஒப்பந்தம் 9 முதல் 20 சதவீதம் வரை மலிவானது என்று தெரிவித்து வந்தனர். ஆனால், அவர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொண்ட ஒப்பந்தம் வெறும் 2.86 சதவீதம் மட்டுமே மலிவானது என்று சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், ரஃபேல் போர் விமானத்தின் விலை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும், முக்கியமான சில தகவல்கள் சிஏஜி அறிக்கையில் விடுபட்டுள்ளன. ஒப்பந்தத்தின் மொத்த தொகையில் 10 சதவீதம், செயல்திறன் உத்தரவாதத் தொகையாக டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் செலுத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகை அந்நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபமென சிஏஜி அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது. ஆனால், போர் விமான ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பைக் கணக்கிடுகையில், இந்தத் தொகை கணக்கில் கொள்ளப்படவில்லை.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், 126 போர் விமானங்களைத் தொழில்நுட்பப் பரிமாற்றத்துடன் சேர்த்து ரூ.11,198 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் ஒரு போர் விமானத்தின் விலை சுமார் ரூ.88.81 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது 36 போர் விமானங்களைத் தொழில்நுட்பப் பரிமாற்றம் இல்லாமல் ரூ.10,398 கோடிக்கு வாங்க பாஜக ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ஒரு போர் விமானத்துக்கான விலை சுமார் ரூ.288 கோடி ஆகும்.
போர் விமானத்தின் விலை 300 சதவீதம் உயர்ந்துள்ளதாக சிஏஜியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தொழில்நுட்பப் பரிமாற்றத்துக்கான விலை கணக்கில் கொள்ளப்படவில்லை. எனவே, அறிக்கை வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் நிலையான விலைக்கு போர் விமானங்களை அளிக்க ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், பாஜக ஆட்சியில், நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில், போர் விமானத்தின் விலையை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. 
இதனால், மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் வெளிநாட்டு நிறுவனத்துக்குச் செல்ல பாஜக துணைபுரிந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை அடகு வைக்க முற்பட்ட பாஜக, இந்தக் குளறுபடிகளைக் கவனிப்பதில் தோல்வியைத் தழுவியுள்ளது. சிஏஜியின் அறிக்கையும் முற்றிலும் பொய்யாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.