புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மேற்கொண்டு வரும் தர்ணாவுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக அந்த மாநில முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் மாளிகை எதிரில் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த விவகாரம் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டிருந்த பதிவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமி கடந்த மூன்று நாள்களாக சாலையோரம் தூங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார். எந்த மாதிரியான ஜனநாயகம் இது? வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வாக்காளர்களால் தோற்கடிக்கப்பட்டவர்களிடம் கெஞ்சுகின்றனர். தில்லி, புதுச்சேரிவாசிகளின் வாக்கு பிற மாநிலங்களைவிட தாழ்ந்ததா என்ன?' என அதில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் நாராயணசாமி மேற்கொண்டு வரும் தர்ணாவுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
தில்லி முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகிய இருவரும் புதுச்சேரிக்கு திங்கள்கிழமை காலை விமானத்தில் வந்தனர். பின்னர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு நண்பகல் வாக்கில் சென்றடைந்தனர்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து, கேஜரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'புதுச்சேரி மக்களோடு ஒற்றுமையாக இருப்பதை வெளிக்காட்ட முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்தேன். அவர் துணை நிலை ஆளுநரின் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடி வருகிறார். தில்லிக்கும் புதுச்சேரிக்கும் வழங்கப்பட்டுள்ள யூனியன் பிரதேச அந்தஸ்த்து அங்குள்ள மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. முழு மாநில அந்தஸ்து கோரி இணைந்து போராடுவோம்' என்று தெரிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


