நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாரிக்கர் உயிருடன் இருக்கும் வரை அவர்தான் கோவா முதல்வர்: துணை சபாநாயகர் உறுதி 

மனோகர் பாரிக்கர் உயிருடன் இருக்கும் வரை அவர்தான் கோவா மாநில முதல்வராக இருப்பார் என்று, அம்மாநில சட்டப்பேரவை   துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 பிப்ரவரி 2019, 10:25 am

DIN

பனாஜி: மனோகர் பாரிக்கர் உயிருடன் இருக்கும் வரை அவர்தான் கோவா மாநில முதல்வராக இருப்பார் என்று, அம்மாநில சட்டப்பேரவை   துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கணையப்  புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக மாநிலத்தில் நிலவும் கூட்டணி ஆட்சி தொடர்பாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் மனோகர் பாரிக்கர் உயிருடன் இருக்கும் வரை அவர்தான் கோவா மாநில முதல்வராக இருப்பார் என்று, அம்மாநில சட்டப்பேரவை   துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.

வடக்கு கோவாவில் உள்ள தனது கலங்குட்டே தொகுதி கிராமப் பஞ்சாயத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் செவ்வாயன்று அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மனோகர் பாரிக்கர் எப்போதும் ஓய்வு எடுக்கவே விரும்பாத ஒருவராவார். அவர் இந்த உலகில் உயிருடன் இருக்கும் வரை, முதல்வர் நாற்காலியில் இருந்து விலக மாட்டார். அவர் கோவா மாநில மக்களுக்காக உழைத்துக் கொண்டேதான் இருப்பார்.

அவர் தனது நினைவுடன் செயலாற்றி, அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் வரையில் இந்த அரசாங்கம் தொடந்து செயல்படும்.

அவரது உடல்நிலை உள்ளிட்ட மற்ற எல்லா விஷயங்களும் கடவுள் கையில்தான் உள்ளது.   அவருக்கு எதுவும் நேர்ந்தால் பின்னர் அப்போது என்ன செய்ய வேண்டுமென்பதைப் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.