எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ப.சிதம்பரத்தின் மனைவி தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி 'திடீர்' விலகல் 

ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தொடர்பான சாரதா சிட்பண்ட் வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகியுள்ளார்.

News image
Updated On :20 பிப்ரவரி 2019, 11:57 am

DIN

புது தில்லி: ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தொடர்பான சாரதா சிட்பண்ட் வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகியுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த  சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள், எல்.நாகேஸ்வரராவ் மற்றும்  சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாரதா சிட்பண்ட் வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகியுள்ளார். 

இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் அறிவித்தார்.

அத்துடன் இந்த வழக்கில் மேற்கு வங்க அரசு சார்பில் வழக்கறிஞராக ஆஜராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.