குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழும்: எடியூரப்பா

 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர்,  கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத  கூட்டணி அரசு கவிழும் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:26 am IST


 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர்,  கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத  கூட்டணி அரசு கவிழும் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
ஹாவேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக வெற்றி உறுதியேற்பு மாநாட்டைத் தொடக்கிவைப்பதற்கு முன்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
கர்நாடகத்தை ஆளும் மஜத- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் தீவிரமாக இருந்துவருகிறது.  இந்தக் கட்சிகளின் தலைவர்கள் கருத்துவேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர்,  இரு கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பில்லை.  அப்போது கூட்டணி அரசு கவிழ்வது உறுதி.  மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் பாஜக செய்துள்ளது.  
ஹாவேரிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட  யார் வந்து பிரசாரம் செய்தாலும், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக, கலபுர்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி  வருகை தருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் சூழ்நிலை எந்த மாதிரி மாறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். 
தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வேலையில் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை காங்கிரஸார் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். 
அதனால்தான் முதல்வர் பதவியை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜி.பரமேஸ்வருக்கு வழங்காமல் அந்தக் கட்சியினர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். அந்த வருத்தத்தையே பரமேஸ்வர் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.