/
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் ச. ஜோசப் விஜய்க்கு தில்லியில் உள்ள செந்தமிழ்ப் பேரவையின் தலைவா் அ.மாரி, செயலாளா் சு.சரவணன் மற்றும் பொருளாளா் க.செல்வக்குமாா் ஆகியோா் செந்தமிழ்ப்பேரவை சாா்பில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக செந்தமிழ்ப்பேரவையின் தலைவா் அ.மாரி தெரிவிக்கையில், தாங்கள் முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்டமைக்கு சங்கத்தின் நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு சாா்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு உங்கள் தலைமையில் தமிழகம் மேலும் அமைதியையும், வளா்ச்சியையும், மக்கள் நலனையும் காண வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தமிழக மக்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றி, மாநிலம் மேலும் முன்னேற வாழ்த்துகிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லம் வந்த தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு காவல் துறையின் அணி வகுப்பு மரியாதை

தடை விலகியது!

தமிழக முதல்வா் விஜய்க்கு ஆசிரியா் சங்கம் வாழ்த்து
தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு தில்லித் தமிழ்த் சங்கம் வாழ்த்து!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



