பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப் படையைச் சேர்ந்த மிராஜ் 2000 போர் விமானங்கள் இன்று நடத்திய பதிலடித் தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படை இந்த தகவலை உறுதி செய்துள்ளது. மேலும், 12 மிராஜ் போர் விமானங்கள் ஆயிரம் கிலோ எடைகொண்ட வெடிகுண்டுகளை, இந்திய எல்லையோரம் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது சில நொடிகளில் வீசிவிட்டு எந்த சேதமும் இன்றி திரும்பி வந்துள்ளது.
இந்திய எல்லையையொட்டியிருக்கும் பாலகோட், சாகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை முற்றிலும் தரைமட்டமாக்கிவிட்டுத் திரும்பியுள்ளது.
இந்திய எல்லையையொட்டியிருந்த இப்பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப் படை நடத்தியிருக்கும் இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசோ விமானப் படையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
பிப்ரவரி 14ம் தேதி நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அதிரடித் தாக்குதலை இந்திய விமானப் படை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் தரப்பில்..
பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்தது இந்திய விமானப்படை. முஸாபராபாத் பகுதிக்குள் தாக்குதல் நடத்த வந்த இந்திய விமானப் படை மீது, பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுக்கத் தயாரானது. ஆனால் இந்திய விமானப் படை சில குண்டுகளை வீசிவிட்டு திரும்பிச் சென்றுவிட்டதால் இங்கு எந்த உயிர் பலியோ சேதமோ ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


