எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை மூலம் ரூ. 100 கோடி வரி ஏய்ப்பு: சோனியா ராகுலுக்கு நோட்டீஸ்   

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குதாரர்களாக இருந்த வகையில் சோனியாவும், ராகுலும் சுமார் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது 

News image
Updated On :10 ஜனவரி 2019, 9:59 am

DIN

புது தில்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குதாரர்களாக இருந்த வகையில் சோனியாவும், ராகுலும் சுமார் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது 

காங்கிரஸ்  கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும் அவரின் மகனும் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தியும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குதாரர்களாக இருந்த வகையில் சுமார் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

முன்னதாக சோனியா மற்றும் ராகுல் இருவரின் 2011-12 ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை மறு ஆய்வு செய்வதை எதிர்த்து சோனியாவும் ராகுலும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு புதனன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது சோனியா சார்பில் ஆஜரான காங்கிரஸ் மூத்த தலைவரான சிதம்பரம் வருமான வரித்துறை தவறான கணக்குகள் மூலம் சோனியிலா மற்றும் ராகுலுக்கு 141 கோடி ரூபாய் வரை வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளது என்று தெரிவித்தார். 

பின்னர் இதுதொடர்பாக  ஒரு வாரத்துக்குள்  மூன்று தரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.