ஒவ்வொரு சுயஉதவிக் குழுவில் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன் 

ஒவ்வொரு சுயஉதவிக் குழுவில் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சுயஉதவிக் குழுவில் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன் 
Published on
Updated on
1 min read

ஒவ்வொரு சுயஉதவிக் குழுவில் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் நிகழ்த்திய உரையில், சுய உதவிக்குழு பெண்கள் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் பெற அனுமதி அளிக்கப்படும். தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு, 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பெண்கள் பங்களிப்பு மட்டுமின்றி பெண்கள் தலைமை ஏற்கவும் தொடங்கிவிட்டனர். ஜன்தன் கணக்கு வைத்துள்ள சுய உதவிக்குழுவினர் ஓவர் டிராப்ட் முறையில் ரூ.5000 வரை பெற முடியும். 

இந்திய கைவினைஞர்கள் தங்களது பொருட்களை உலகெங்கும் விற்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றார். 
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com