மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

துபையில் பேருந்து விபத்து: உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

News image
Updated On :7 ஜூன் 2019, 11:54 am

IANS

துபை: துபையில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

31 பயணிகளுடன் ஓமனில் இருந்து வந்த பேருந்து சாலையோரம் இருந்த தடுப்பில் மோதியதில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

துபையில் ஐ ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே பேருந்துகள் நுழைவதற்கு வசதி இல்லா குறுகிய சாலையில் நுழைந்த ஆம்னி பேருந்து, சாலையோரம் இருந்த பெயர்ப் பலகையில் வேகமாக மோதியதில் பேருந்தில் இருந்த 17 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியானவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

பேருந்தில் 31 பேர் இருந்தனர். பேருந்து குறுகிய சாலைக்குள் நுழைந்த போது, பக்கவாட்டில் இருந்த தடுப்பில் மோதிய போது, பேருந்தின் வலது பக்கம் முழுமையாக சேதம் அடைந்தது. இதில் வலது பக்கம் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த ராஜகோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்கவீட்டில், கிரண் ஜான்னி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாகூர், உம்மர் சோனோகடவத், அவரது மகன் நபில் உம்மெர் என்பது தெரிய வந்துள்ளது.

ரஷீத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 இந்தியர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.