விமானப் படைக்கு சொந்தமான காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் அருகே கண்டுபிடிப்பு? 

விமானப் படைக்கு சொந்தமான காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானப் படைக்கு சொந்தமான காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் அருகே கண்டுபிடிப்பு? 

இடா நகர்: விமானப் படைக்கு சொந்தமான காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்ஸாமின் ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில் இருந்து ஏஎன்-32 ரகத்தைச் சேர்ந்த போக்குவரத்து பயன்பாட்டுக்கான விமானம் ஒன்று கடந்த 3-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. அருணாசல பிரதேச மாநிலம் மெசுகாவில் உள்ள ராணுவ தளத்தை நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் 8 விமானப் பணியாளர்களும், 5 பயணிகளும் பயணித்தனர். விமானம் புறப்பட்ட 35 நிமிடத்திலேயே ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. அத்துடன், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தனது தொடர்பையும் இழந்தது. 

மாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30, சி-130 ஆகிய இரு ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லை காப்புப் படையைச் சேர்ந்த வீரர்களும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது அதனை உறுதி செய்வதற்காக விமானப் படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com