மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன்: மாயமானதாகக் கதைக்கட்டப்பட்ட தேஜஸ்வி யாதவ் டிவீட்

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் பல்வேறுக் கட்டுக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவரே தனது இருப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :29 ஜூன் 2019, 9:38 am

IANS


பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் பல்வேறுக் கட்டுக் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவரே தனது இருப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிகார் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி பங்கேற்கவில்லை. 

இதனால், அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியும், மாயமாகிவிட்டதாக விமரிசனங்களும் எழுந்தன.

இந்த நிலையில், தேஜஸ்வி வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், நண்பர்களே, கடந்த சில நாட்களாக நான் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் நான் மாயமாகவிட்டதாகக் கூறி கிளப்பிய கட்டுக்கதைகளால் ஆச்சரியம் அடைந்தேன். சில ஊடகங்களும் இது தொடர்பாக சுவாரஸ்யக் கதைகளை வெளியிட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி, மே 29ம் தேதிக்குப் பிறகு எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.