பனாஜி: கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.
தற்போது 36 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு.
கோவா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 20 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாஜக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,
கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணமடைந்ததை அடுத்து, அரசியல் குழப்பம் ஏற்பட்டது. 14 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ், பேரவையில் தாங்கள்தான் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
இந்நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று, கோவா சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை புதன்கிழமை பகல் 11.30 மணியளவில் நடத்த ஆளுநர் மிருதுளா சின்ஹா உத்தரவிட்டார்.
முன்னதாக, கோவா முதல்வராக திங்கள்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு (இரவு 2 மணியளவில்) பிரமோத் சாவந்த் பொறுப்பேற்றார். அரசியல் குழப்பத்தை தவிர்க்கவே அவர் நள்ளிரவில் பொறுப்பேற்றதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இன்று காலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


