மத்தியப்பிரதேசத்தில் இன்று மையம் கொள்ளவிருக்கும் இரு சூறாவளிகள்!
மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இது குறித்து பாஜக தலைமையகம் தெரிவித்திருக்கும் தகவலில், இன்று இடார்ஸி, போபால் வழியாக ஹோஷிங்காபாத் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே மைய மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்ற உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்தியப் பிரதேச மாநிலம் பிபாரியாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த பொதுக் கூட்டத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத்தும் பங்கேற்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...