மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

இந்தியாவில் வெப்பநிலை உயர்ந்துவிட்டால் ராகுல் வெளிநாட்டுக்கு கிளம்பிவிடுவார்: அமித் ஷா கிண்டல்

இந்தியாவில் வெப்பநிலை உயர்ந்துவிட்டால் ராகுல் காந்தி வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவார், அவர் எங்கு செல்கிறார் என்பது அவரது  தாய் சோனியாவுக்குக் கூட தெரியாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

News image
Updated On :2 மே 2019, 10:38 am

PTI


பியோரா: இந்தியாவில் வெப்பநிலை உயர்ந்துவிட்டால் ராகுல் காந்தி வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவார், அவர் எங்கு செல்கிறார் என்பது அவரது  தாய் சோனியாவுக்குக் கூட தெரியாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமித் ஷா, 2014ம் ஆண்டு அவர் பிரதமராக பதவியேற்ற பிறகு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் நாட்டுக்காக பணியாற்றி வருகிறார் என்றார்.

ஓய்வெடுக்காமல் நாட்டுக்காக பணியாற்றி வருகிறார் மோடி, மற்றொரு பக்கம் ராகுலோ ஆண்டுதோறும் விடுமுறைக்கு வெளிநாட்டுக்கு ஓடிவிடுவார், அவர் எங்கு செல்கிறார் என்பது தாய் சோனியாவுக்குக் கூட தெரியாது என்று பேசினார். என் மகன் எங்கிருக்கிறார் என்று அவ்வப்போது சோனியா கேட்டுக் கொண்டே இருப்பார்.

எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இந்தியா வெடிகுண்டுகளால் பதிலடி கொடுக்கும் என்றும் அமித் ஷா பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.