காய்கறி நறுக்கினால் கூட கையில் இருக்கும் ஸ்மார்ட்வாட்ச்சால் கண்டுபிடிக்க முடியுமாம்! உஷார்

தகவல் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச முயற்சியாக, கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச்சால், அதைக் கட்டியிருப்பவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியும் அளவுக்கு மெருகேற்றப்பட்டுள்ளது.
காய்கறி நறுக்கினால் கூட கையில் இருக்கும் ஸ்மார்ட்வாட்ச்சால் கண்டுபிடிக்க முடியுமாம்! உஷார்


நியூ யார்க்: தகவல் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச முயற்சியாக, கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச்சால், அதைக் கட்டியிருப்பவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியும் அளவுக்கு மெருகேற்றப்பட்டுள்ளது.

கார்னேஜ் மெல்லர்ன் பல்கலை நடத்திய ஆராய்ச்சியில், ஸ்மார்ட்வாட்சைக் கட்டியிருப்பவர், காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாலோ, பாத்திரம் கழுவினாலோ, தனது நாயை கொஞ்சினால் கூட அதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறது.

ஸ்மார்ட்வாட்ச்சின் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் செய்யப்பட்டிருக்கும் சிற்சில மாற்றத்தின் மூலம், அதைக் கட்டியிருப்பவரின் 25 விதமான கை அசைவு மற்றும் சத்தத்தின் மூலம், அவர் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பதை 95% துல்லியமாகக் கணிக்க முடியும் என்கிறார்கள்.

இது வெறும் ஆரம்பம்தான் என்றும், இன்னும் அதனை ஸ்மார்ட்டாக மாற்றும் முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com