/

போபர்ஸ் ஊழல் வழக்கில் மறு விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரிய மனு: நீதிமன்றத்தில் வாபஸ் பெற்ற சிபிஐ 

போபர்ஸ் ஊழல் வழக்கில் மறு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. திரும்பப் பெற்றுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:25 pm IST

புது தில்லி: போபர்ஸ் ஊழல் வழக்கில் மறு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த 1986-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. அந்த பீரங்கிகளின்  கொள்முதலில் அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் ஆகியோர் கடந்த 2005-ம் ஆண்டில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.

அதேசமயம் போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கைகளை, பாராளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு சமீபத்தில் ஆய்வு செய்தது. அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது

அதையடுத்து தில்லி நீதிமன்றத்தில் போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் 2018 பிப்ரவரியில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் புதிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக  சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்நிலையில் போபர்ஸ் ஊழல் வழக்கில் மறு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. திரும்பப் பெற்றுள்ளது.

இந்த வழக்கில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.