சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங் என்ற பி.எஸ். கோலே (51) தலைமையிலான புதிய அரசு திங்கள்கிழமை (மே 27) பதவியேற்கவுள்ளது.
சிக்கிம் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அந்த மாநிலத்தை ஆண்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எஃப்.) 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்தது. எதிர்க்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 17 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் கங்காபிரசாதை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், 17 எம்எல்ஏக்களுடன் சென்று சந்தித்து ஆட்சியமைக்க சனிக்கிழமை உரிமை கோரினார். முன்னதாக, ஊழல் வழக்கில் பிரேம் சிங் தமாங், ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இதனால் சட்ட ஆலோசனை பெற்று, ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவரிடம் ஆளுநர் தெரிவித்தார்.
இந்நிலையில், சட்ட ஆலோசனை கேட்ட பிறகு, மாநிலத்தில் ஆட்சியமைக்கும்படி பிரேம் சிங் தமாங்குக்கு ஆளுநர் கங்கா பிரசாத் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, கேங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான புதிய அரசு பதவியேற்கவுள்ளது. விழாவில் பிரேம் சிங் தமாங்குக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் கங்காபிரசாத் செய்து வைக்கவுள்ளார்.
தமாங்குடன் சேர்த்து மேலும் சிலர் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்பிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
சிக்கிம் கிராந்திகாரி கட்சி, கடந்த 2013-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் தமாங் போட்டியிடவில்லை. அனைத்து தொகுதிகளிலும் தமது கட்சியின் வேட்பாளர்களுக்காக அவர் தீவிர பிரசாரம் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்

எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



