தெலங்கானாவில் பெண் தாசில்தார் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் அப்துல்லாபுர்மெட் மண்டலத்தின் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி.
இன்று அவர் வழக்கம் போல அலுவலகத்துக்கு வந்தார். ஆனால் அது ஒரு வழக்கமான நாளாக இருக்காது என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்காது.
அவர் தனது பணிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்த மர்ம நபர், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் விஜயாவின் உடல் முழுவதம் தீ பரவியது. சம்பவ இடத்திலேயே அவர் தீயில் கருகி பலியானார்.
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் தாசில்தார் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண் இமைக்கும் நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவம், அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


