மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தீவிரம்

பூஞ்ச் மாவட்டத்தில் 4 சிறிய ரக பீரங்கி குண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன.

News image
Updated On :12 நவம்பர் 2019, 6:53 am

இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் செவ்வாய்கிழமை ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 1 பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காஷ்மீர் போலீஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, பந்திபோரா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றனா். அதுமட்டுமல்லாமல் பூஞ்ச் மாவட்டத்தில் 4 சிறிய ரக பீரங்கி குண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.