ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமர் கோயில் கட்ட முகேஷ் அம்பானி ரூ.500 கோடி கொடுத்தாரா? வைரலாகும் புரளி

பொய் என்றாலும் அதிலும் ஒரு அளவு வேண்டாமா? முகேஷ் அம்பானி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.500 கோடி பணம் கொடுத்ததாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் அதுவும் புகைப்படத்துடன் பரவி வருகிறது.

News image
mukesh ambani
Updated On :21 நவம்பர் 2019, 9:27 am

DIN


பொய் என்றாலும் அதிலும் ஒரு அளவு வேண்டாமா? முகேஷ் அம்பானி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.500 கோடி பணம் கொடுத்ததாக சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் அதுவும் புகைப்படத்துடன் பரவி வருகிறது.

ஆனால், அது உண்மையான தகவல் அல்ல என்றும், அந்த புகைப்படம் 2017ம் ஆண்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, முகேஷ் அம்பானி சந்தித்த போது எடுத்தப் புகைப்படம் என்றும் விளக்கமும் வைரலாகி வருகிறது.

2017ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை ஒருவர், தற்போது பதிவு செய்து, முகேஷ் அம்பானி ராமர் கோயில் கட்ட ரூ.500 கோடி கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் போட, அதனை ஒரு 10 ஆயிரம் பேர் ஷேர் செய்ய, உடனே அது வைரலானது.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல, வைரலாவதெல்லாம் உண்மையல்ல என்பதை மக்களே தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.

எந்த செய்தி உங்களை வந்தடைந்தாலும், உடனே அதனை ஷேர் அல்லது ஃபார்வேர்ட் செய்யாமல், அதன் உண்மைத்தன்மையை பரிசோதியுங்கள். இல்லையென்றால், அதை யாருக்கும் பகிராமல் அப்படியே விட்டுவிடுங்கள் போதும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.