மகாராஷ்டிராவில் சட்டத்திற்கு புறம்பாக பாஜக ஆட்சி அமைத்துள்ளதாகக் கூறி, அரசியலமைப்பு தினமான இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஒருமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் 70வது அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்ற விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் அரசியலமைப்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததோடு, அரசியலமைப்பு தினத்தில் பாஜக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் சட்டத்திற்கு புறம்பாக, ஜனநாயகத்திற்கு எதிராக பாஜக ஆட்சி அமைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் 'Stop murder of democracy' என்ற பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் திமுக, ஆர்.ஜே.டி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


