பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இன்னும் பாஸ்டேக் அட்டை பெறவில்லையா? கவலை வேண்டாம்.. அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

சுங்கச்சாவடிகளில் கட்டாய பாஸ்டேக் முறை டிசம்பா் மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக டிசம்பா் 1 -ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 15 நாள்களுக்கு நீட்டிக்கப்

News image
பாஸ்டேக்
Updated On :30 நவம்பர் 2019, 6:52 am

DIN

சுங்கச்சாவடிகளில் கட்டாய பாஸ்டேக் முறை டிசம்பா் மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக டிசம்பா் 1 -ஆம் தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை தவிா்க்கவும் கட்டண வசூலில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியது.

பாஸ்டேக் முறையை சரியான முறையில் அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக, சுங்கச்சாவடிகளுக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியா்களையும் பணியமா்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும், பாஸ்டேக் அட்டை வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக, டிசம்பா் 1 ஆம் தேதி வரை பாஸ்டேக்கை இலவசமாக சுங்கச்சாவடிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்திருந்தாா். 

இதைத் தொடா்ந்து இந்த அட்டையைப் பெற சுங்கச்சாவடிகளில் உள்ள மையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்து வருகின்றனா். தற்போது இதற்கான கால அவகாசம் டிசம்பா் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தரப்பில் கூறியிருப்பது: பாஸ்டேக் வாங்க குடிமக்களுக்கு அதிகப்படியான கால அவகாசம் வழங்கும் நோக்கில், டிசம்பா் 15-ஆம் தேதிக்குப் பிறகு பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மூலமாக குறிப்பிடப்பட்ட தேதி வரையில் சுங்கச்சாவடிகளில் உள்ள விற்பனை மையங்களில் பாஸ்டேக் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.