உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நியமனம்
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதியான எஸ்.ஏ.போப்டேவை புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு ரஞ்சன் கோகோய் பரிந்துரைத்தார்.


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 3-ஆம் தேதி பதவியேற்றாா். அவரது பதவிக்காலம் வரும் நவம்பா் மாதம் 17-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதியான எஸ்.ஏ.போப்டேவை புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு ரஞ்சன் கோகோய் பரிந்துரைத்தார்.
இந்தப் பரிந்துரை மீது மத்திய சட்ட அமைச்சகம் முடிவெடுத்து, அதை பிரதமா் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்தது. அவா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நியமிக்கப்படுவதற்கான ஆணையை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே, நவம்பா் 18-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். அடுத்த 18 மாதங்களுக்கு அந்தப் பதவியில் அவா் நீடிப்பாா். அவரது பதவிக்காலம் ஏப்ரல் 23, 2021-ஆம் தேதி முடிவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...