பணமின்றித் திரும்பி வந்த காசோலைகள்: இசை நிகழ்ச்சியில் இருந்து பின்வாங்கிய பிரபல நடிகை
தனக்கு வழங்கப்பட்ட காசோலைகள் பணமின்றித் திரும்பி வந்த காரணத்தால், பிரபல பாலிவுட் நடிகை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


மும்பை: தனக்கு வழங்கப்பட்ட காசோலைகள் பணமின்றித் திரும்பி வந்த காரணத்தால், பிரபல பாலிவுட் நடிகை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோன். இவர் குஜராத் மாவட்டம் அஹமதாபாத்தில் நவம்பர் 8 -ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 'அபிமன்யு' என்னும் இசை நிகழ்ச்சியியல் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிரபல கதக் நடனக் கலைஞரான சந்தீப் மகாவீர் இந்த நிகழ்ச்சிக்கான திட்டத்தை உருவாக்கி வடிவமைப்பு செய்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட காசோலைகள் பணமின்றித் திரும்பி வந்த காரணத்தால், சன்னி லியோன் அபிமன்யு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும்போது, 'சன்னி லியோன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சந்தீப் மகாவீர் அவருக்கு அளித்த காசோலைகள் பணமின்றித் திரும்ப வந்து விட்டன. எனவே அவர் அந்த இசைநிகழ்ச்சியில் பங்கேறக மாட்டார்' என்று தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...