ஹெல்மெட் அணியவில்லை..ஆவணங்கள் இல்லை: இளைஞருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் 

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியவில்லை மற்றும் உரிய ஆவணங்கள் இல்லை ஆகிய விதிமீறல் குற்றங்களுக்காக தில்லி இளைஞர் ஒருவருக்கு ருக்கு 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது
ஹெல்மெட் அணியவில்லை..ஆவணங்கள் இல்லை: இளைஞருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் 
Published on
Updated on
1 min read

குருகிராம்: இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியவில்லை மற்றும் உரிய ஆவணங்கள் இல்லை ஆகிய விதிமீறல் குற்றங்களுக்காக தில்லி இளைஞர் ஒருவருக்கு ருக்கு 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிழக்கு தில்லியில் உள்ள கீதா காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் மதன். இவர் திங்களன்று குருகிராம் மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது, போக்குவரத்து காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர்.

ஹெல்மெட்  அணியாமல் இருந்த அவரிடம் வாகனம் தொடர்பான ஆவணங்களைக்  கேட்டுள்ளனர். அதை அவர் சரியாக ஒப்படைக்காத காரணத்தால், அவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவருக்கு அளிக்கப்பட்ட ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக  - ரூ.5000

வாகனப் பதிவுச் சான்றிதழ் இல்லாததற்காக - ரூ.5000

வாகனக் காப்பீடு இல்லாமல் பயணித்ததற்காக - ரூ. 2000

வாகனப் புகையால் சுற்றுச் சூழலை மாசுபடுத்தியதற்காக - ரூ. 10000

ஹெல்மெட் அணியாததற்காக - ரூ. 1000

இதுதொடர்பாக தினேஷ் மதன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'நான் எந்தவித போக்குவரத்து விதிமீறலிலும் எடுபடவில்லை. அவர்கள் கேட்ட  அனைத்து ஆவணங்களையும் பத்து நிமிடங்களுக்குள் கொண்டு வந்து தரவேண்டும் என்று கூறினார்கள். நான் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக எனது வாகனத்தை நிறுத்தினார்கள். அதற்காக ரூ. 1000 அபராதம் விதித்தார்களே என்று தெரிவித்துள்ளார்.     

செப்டம்பர்  1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் புதிய மோட்டார் வாகனச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com